ட்ரெண்டிங்

சேலம் மாவட்டத்தில் நேற்று பெய்த மழை விவரம் !!!

 

மாவட்ட நிர்வாகம் அளித்த தகவலின் அடிப்படையில் ஆத்தூரில்,அதிகபட்சமாக 46.2,மி.மீ மழை பெய்துள்ளது.

அதன்படி நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை அளவுகள் பதிவாகியுள்ளன.

அதன்படி,சேலத்தில் 7.8 மி.மீ.,ஏற்காட்டில் 17.4 மி.மீ.,வாழப்பாடி 35 மி.மீ.,ஆணைமடு,12 மி.மீ.,ஆத்தூர் 46.2 மி.மீ., கெங்கவல்லி,5 மி.மீ.,ஏத்தாபூர்,43 மி.மீ.,கரியகோவிலில் 16 மி.மீ.,நாத்தகரையில்,7 மி.மீ.,சங்ககிரியில் 2 மி.மீ.,மேட்டூரில் 21 மி.மீ.,ஓமலூரில்,1.5 மி.மீ., டேனிஸ் பேட்டை 9.1 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.மற்ற பகுதிகளில் (தம்மாம்பட்டி, வீரகானூர், எடப்பாடி) மழை பதிவாகவில்லை.

மொத்தமாக சேலம் மாவட்டத்தில் ஒரே நாளில் 223 மி.மீ. மழை பெய்துள்ளது. சராசரி மழை அளவு 13.94 மி.மீ. என கணக்கிடப்பட்டுள்ளது.