ட்ரெண்டிங்

7 வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் இடமாற்றம்!

தமிழக போக்குவரத்துத்துறையில் 7 வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். 3 மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, நாமக்கல் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகேசன், நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலராகவும், அரியலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் பிரபாகர், ஓசூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலராகவும், திருநெல்வேலி வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகரன், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் சரக துணை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் பறக்கும் படை அலுவலர் அறிவழகன், அரியலூர் வட்டார போக்குவரத்து அலுவலராகவும், புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயசங்கர் தஞ்சாவூர் வட்டார போக்குவ ரத்து அலுவலராகவும் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் இளங்கோ செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலராகவும், ஸ்ரீரங்கம் போக்குவரத்து இணை ஆணையர் அலுவலக பறக்கும் படை அலுவலர் சிவானந்தம் செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலராகவும் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை போக்குவரத்து ஆணையர் சிரு பிறப்பித்துள்ளார்.

நாமக்கல் வடக்கு மோட்டார் வாகன ஆய்வாளர் சக்திவேல் பதவி உயர்வு பெற்று நாமக்கல் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலராகவும், திருநெல்வேலி துணை அணையர் அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் மோகனபிரியா, திருநெல்வேலி வட்டாரப் போக்குவரத்து அலுவலராகவும், புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலரின் நேர்முக உதவியாளர் நடராஜன் பதவி உயர்வு பெற்று புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.