ட்ரெண்டிங்

விலை கடும் சரிவு....சின்ன வெங்காயத்தை அதிகளவு வாங்கிச் செல்லும் மக்கள்! 

சின்ன வெங்காயத்தின் விலை கடுமையாக சரிந்துள்ளதால், அதனை அதிகளவில் பொதுமக்கள் வாங்கிச் செல்கின்றனர். 

சின்ன வெங்காயத்தின் விளைச்சல் மற்றும் வரத்து அதிகரித்ததன் காரணமாக, சேலம் ஓமலூரில் உள்ள வெங்காய மண்டிகளில் சின்ன வெங்காயத்தின் விலை கிலோவுக்கு ரூபாய் 10 குறைந்து, ரூபாய் 30 முதல் ரூபாய் 35 வரை விற்பனை செய்யப்படுகிறது. விலை குறைவால் சின்ன வெங்காயத்தை பொதுமக்கள் அதிகளவு வாங்கிச் செல்கின்றனர். 

கடந்த ஜூலை மாதம் சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூபாய் 40 முதல் 45 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த சூழலில், சின்ன வெங்காயம் விலை குறைந்திருப்பது பொதுமக்கள் மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.