ட்ரெண்டிங்

புரட்டாசி மாத அமாவாசையையொட்டி, சேலத்தில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறி

வரும் அக்டோபர் 14- ஆம் தேதி சனிக்கிழமை அன்று புரட்டாசி அமாவாசை என்பதால், சேலம் நகர பேருந்து நிலையத்தில் இருந்து சித்தர்கோவிலுக்கும், சேலம் புதிய பேருந்து நிலையம், மேட்டூர் பேருந்து நிலையம், தருமபுரி பேருந்து நிலையத்தில் இருந்து மாதேஸ்வரன்மலைக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்ட நிர்வாக இயக்குநர் பொன்முடி அறிவித்துள்ளார்.

அதேபோல், வார இறுதி நாளான அக்டோபர் 14, 15- ஆகி தேதிகளில் சேலத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, மதுரைக்கும், சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தருமபுரி மற்றும் மேட்டூருக்கும், ஓசூரில் இருந்து சேலம், புதுச்சேரி, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கும், சேலத்தில் இருந்து சிதம்பரம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

அக்டோபர் 16- ஆம் தேதி வரை பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சிறப்புப் பேருந்துகளில் பயணிகள் அனைவரும் நெரிசலைத் தவிர்த்து, பாதுகாப்பான பயணம் செய்திடும் படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.