மக்களவைத் தேர்தலையொட்டி, தருமபுரியில் தி.மு.க. நிர்வாகி ஒருவர் நூதன பரப்புரையில் ஈடுபட்டார்.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த காளியப்பன், தி.மு.க. நிர்வாகியான இவர், தருமபுரி மாவட்டம், இண்டூர் பகுதியில் குடுகுடுப்பைக்காரர் வேடமிட்டுச் சென்று மக்களை வீடு வீடாகச் சென்று சந்தித்து வாக்குகளைச் சேகரித்தார்.
அப்போது, வரும் மக்களவைத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் எனக் கூறி பரப்புரை செய்தார்.
மக்களவைத் தேர்தல் தேதி இன்னும் சில வாரங்களில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் சூழலில், தி.மு.க.வினர் தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரையைத் தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


