ட்ரெண்டிங்

நீட் தேர்வை ரத்துச் செய்யக்கோரி, சேலத்தில் உண்ணாவிரதப் போராட்டம்!

நீட் தேர்வை ரத்துச் செய்யக்கோரி, தி.மு.க.வின் இளைஞரணி, மாணவரணி, மருத்துவ அணி சார்பில் இன்று (ஆகஸ்ட் 20) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

அதன் தொடர்ச்சியாக, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தி.மு.க.வின் மாவட்டச் செயலாளர்கள் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், எஸ்.ஆர்.சிவலிங்கம், டி.எம்.செல்வகணபதி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் சேலம் மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர்கள், வார்டு செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், கட்சியின் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் என 1,000- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டவர், தமிழகத்திற்கு நீட் விலக்கு அளிக்கும் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கக்கோரி மத்திய அரசுக்கும், மாநில ஆளுநருக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.