ட்ரெண்டிங்

கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை – போக்குவரத்து அதிகாரிகள் எச்சரிக்கை !!!

 

சேலம்:- ஆயுத பூஜை மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு, சேலம் மாநகரில் இயங்கும் ஆம்னி பேருந்துகளில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதாக புகார்கள் வருகின்றன.இதனைத் தடுக்கும் நோக்கில்,போக்குவரத்து துறை அதிகாரிகள்,ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:

 

தொடர் விடுமுறை நாளான நாளை மறுநாள் முதல் சேலம் மாநகரிலும் சுற்றுப்புற பகுதிகளில் வரும் ஆம்னி பேருந்துகள் மீது தீவிர சோதனைகள் நடத்தப்படும்.

 

பயணிகளிடம் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக வசூலித்தால்,உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

 

விதிமீறல் செய்பவர்களுக்கு அபராதம் மட்டுமல்லாமல், பேருந்தின் அனுமதிப் பத்திரம் ரத்து செய்யும் நடவடிக்கையும் எடுக்கப்படும்.

 

சிறப்பு விடுமுறை மற்றும் திருநாள் காலங்களில் அதிகரிக்கும் மக்கள் நெரிசலை முன்னிட்டு இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்படுவதாகவும், பயணிகள் ஏதேனும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் உடனடியாக போக்குவரத்து துறைக்கு புகார் அளிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.