ட்ரெண்டிங்

நாட்டுக்கோழி, கறவை மாடு வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி- பங்கேற்குமாறு விவசாயிகள், இளைஞர்களுக

சேலத்தில் உள்ள விவசாயிகளுக்கு வரும் அக்டோபர் 12- ஆம் தேதி அன்று கறவை மாடு வளர்ப்புப் பயிற்சி அளிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இது தொடர்பாக, சேலம் கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய பேராசிரியர் வடிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகின்றது. இந்த மையத்தில், கால்நடை வளர்ப்பில் பல புதிய தொழில்நுட்பங்களைச் செயல்படுத்தி வருகிறது.

 

அதேபோல், விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், கால்நடை வளர்ப்பில் ஆர்வம் உள்ள விவசாயிகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், வரும் அக்டோபர் 12- ஆம் தேதி கறவை மாடு வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்படி, அக்டோபர் 19- ஆம் தேதி வெண்பன்றி, அக்டோபர் 30- ஆம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு ஆகியவற்றுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. விருப்பம் உள்ள விவசாயிகள், இளைஞர்கள் உள்ளிட்டோர் பயிற்சியில் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.