சேலம் மாவட்டத்தில். 2025 ஆம் ஆண்டிற்கு பள்ளி மாணவ,மாணவியர்களுக்கான பேரறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டிகள் நாளை நடத்தப்பட உள்ளதாக. மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்:
மிதிவண்டிப் போட்டிகள் நாளை 27.09.2025 காலை 6.30 மணியளவில் மகாத்மா காந்தி விளையாட்டரங்கத்தில் நடைபெறவுள்ளது.
வயதுவரம்பு மற்றும் தூர அளவு :-
13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு (01.01.2013 க்குப் பின்னர் பிறந்திருக்க வேண்டும்) 15 கி.மீ தூரமும்.
15 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு (01.01.2011 க்குப் பின்னர் பிறந்திருக்க வேண்டும்) 20 கி.மீ தூரமும்.
17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு (01.01.2009 க்குப் பின்னர் பிறந்திருக்க வேண்டும் )20 கி.மீ தூரமும்
13 வயதிற்குட்பட்ட மாணவியர்களுக்கு (01.01.2013 க்குப் பின்னர் பிறந்திருக்க வேண்டும்) 10 கி.மீ தூரமும்.
15 வயதிற்குட்பட்ட மாணவியர்களுக்கு (01.01.2011 க்குப் பின்னர் பிறந்திருக்க வேண்டும்) 15 கி.மீ தூரமும்.
17 வயதிற்குட்பட்ட மாணவியர்களுக்கு (01.01.2009 க்குப் பின்னர் பிறந்திருக்க வேண்டும்) 15 கி.மீ தூரமும் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசாக ரூ.5000/-. இரண்டாம் பரிசாக ரூ.3000/-மூன்றாம் பரிசாக ரூ.2000/- மற்றும் நான்கு முதல் பத்து இடங்களை பெறுபவர்களுக்கு தலா ரூ.250/- வழங்கப்படும். பரிசு தொகையினை காசோலையாகவோ அல்லது வங்கி மாற்று வழிமூலமாகமோ மட்டுமே வழங்கப்படும். எக்காரணத்தைக் கொண்டும் ரொக்கமாக வழங்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டியில் பங்குகொள்ள விரும்பும் பள்ளி மாணவ, மாணவியர்கள் தலைமையாசிரியர் கையொப்பமிட்ட வயது சான்றுடன் போட்டி நடக்கும் தேதிக்கு முன்னரோ (அ) போட்டி நடக்கும் அன்றோ பதிவு செய்து கொள்ள வேண்டும். அதேபோல் போட்டியில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவியர்கள் இந்தியாவில் தயாரான சாதாரண மிதிவண்டிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அகலகிராங்க் பொருத்தப்பட்டிருத்தல் கூடாது. மிதிவண்டி போட்டியில் நேரும் எதிர்பாராத விபத்துக்களோ (அ) விபத்தில் விளையும் தனிப்பட்ட பொது இழப்புகளுக்கோ பங்கு பெறும் மாணவ, மாணவியரே பொறுப்பாவர்.போட்டியில் பங்கு பெறும் மாணவ, மாணவியர்கள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை அலுவலக நேரத்தில் அணுகி பெயரினை பதிவுசெய்து கொள்ளலாம். போட்டியின் முடிவு நடுவர்தீர்ப்பிற்குட்பட்டது.
போட்டியில் கலந்துகொள்பவர்கள் தங்கள் வங்கிகணக்கு புத்தகத்தின் முதல் பக்கத்தினை தெளிவாககணக்கு எண்தெரியும்படி கொண்டு வருதல் வேண்டும்.
போட்டிக்கான வழித்தடங்கள் :-
மகாத்மாகாந்தி விளையாட்டரங்கத்தில் துவங்கி கோரிமேடு மகாத்மா காந்தி விளையாட்டரங்கத்தில் நிறைவடையும். (13 வயதிற்குள் மாணவியர்கள்-10கி.மீ.) மகாத்மா காந்தி விளையாட்டரங்கத்தில் துவங்கி கொண்டப்பநாயக்கன்பட்டி பஞ்சாயத்து ஆபீஸ் மகாத்மா காந்தி விளையாட்டரங்கத்தில் நிறைவடையும். (13 வயதிற்குள்- மாணவர்கள் 15 கி.மீ. 15 வயதிற்குள் மாணவியர்கள் -15 கி.மீ. 17 வயதிற்குள் - மாணவியர்கள்- 15 கி.மீ.) மகாத்மாகாந்தி விளையாட்டரங்கத்தில் துவங்கி ஏற்காடு அடிவாரம் எம்ரால்ட்வேலி பள்ளி ஏற்காடு அடிவாரம் அஸ்தம்பட்டி மகாத்மாகாந்தி விளையாட்டரங்கத்தில் நிறைவடையும். (15 வயதிற்குள் மாணவர்கள்-20 கி.மீ. 17 வயதிற்குள் மாணவர்கள்-20 கி.மீ.) விருப்பமுள்ள மாணவ, மாணவியர்கள் மிதிவண்டிப் போட்டிகளில் விதிமுறைகளுக்குட்பட்டு கலந்து கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி,தெரிவித்துள்ளார்கள்.

-nxLeT3U83i.jpeg )
-SXgDfGgJfO.jpg)