ட்ரெண்டிங்

விற்பனை சரிந்த போதும், கடல் மீன்களின் விலை உயர்வு!

சேலம் மாநகரில் சூரமங்கலம், வ.உ.சி. பூ மார்க்கெட் மற்றும் தர்மா நகர் ஆகிய பகுதிகளில் மீன் மார்க்கெட்டுகள் செயல்பட்டு வருகின்றன. அதேபோல், அம்மாப்பேட்டை, தாதம்பட்டி, கொண்டலாம்பட்டி, கோரிமேடு, அஸ்தம்பட்டி, சாரதா கல்லூரி சாலை உள்ளிட்ட பகுதிகளில் சில்லறை விற்பனை செய்யும் கடைகள் ஏராளம் செயல்பட்டு வருகின்றன.

 

தற்போது புரட்டாசி மாதம் என்பதால், பொதுவாக இறைச்சிகளின் விற்பனை குறைவாகவே இருக்கிறது. குறிப்பாக, செல்லவேண்டுமென்றால் மீன் விற்பனை குறைவாகவே உள்ளது.

 

எனினும், சேலம் மாநகரில் உள்ள மீன் மார்க்கெட்டுகளுக்கு மேட்டூர், ஓகேனக்கலில் இருந்து ஆற்று மீன்களும், நாகை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து கடல் மீன்களும் அதிகளவில் விற்பனைக்காகக் கொண்டு வரப்படுகிறது.

 

இந்த நிலையில், விற்பனை குறைவாக இருந்த போதும், கடல் மீன்களின் விலை கிலோவுக்கு ரூபாய் 50 முதல் ரூபாய் 100 வரை உயர்ந்திருந்தது. அதன்படி, சங்கரா மீன் கிலோ 350 ரூபாய்க்கும், மத்தி மீன் 200 ரூபாய்க்கும், ஊளி 400 ரூபாய்க்கும், கடல் பாறை 580 ரூபாய்க்கும், வஞ்சிரம் 750 ரூபாய்க்கும், அயிலை 220 ரூபாய்க்கும் விற்பனையானது.