ட்ரெண்டிங்

சேலம் திருமணிமுத்தாற்றில் மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு !!!

 

சேலம்:திருமணிமுத்தாற்றில் சாயப்பட்டறைக் கழிவுகள் கலப்பதால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்தனர். 

தொடர்ந்து, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அப்பகுதிகளில் இன்று திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.

மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு சுற்றுச்சூழல் பொறியாளர் திருமதி நித்யலட்சுமி தலைமையில் பறக்கும் படையினர் நேற்று குகை, கொண்டலாம்பட்டி, மன்னார்பாளையம் பிரிவு உள்ளிட்ட பல பகுதிகளில் திடிர் ஆய்வு மேற்கொண்டனர். அப்பகுதிகளில் செயல்படும் சாயப்பட்டறைகளின் கழிவுநீர் சுத்திகரிப்பு முறைகள், நேரடியாக ஆற்றில் கலக்கப்படுகிறதா என்பதைத் தெளிவாக ஆய்வு செய்து, விதிமீறல் கண்டறியப்பட்ட இடங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அத்துடன், சுற்றுச்சூழல் மாசுபாடு தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்க சாயப்பட்டறை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டது. விதிமீறல் நடக்கும் இடங்களில் வழக்குகள் பதிவு செய்து அபராதம் விதிக்கப்படும் என்றும்,சாயக்கழிவு கலப்பைத் தடுக்க தொடர்ந்து கண்காணிப்பு நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நடவடிக்கையை விவசாயிகள் வரவேற்பதுடன்.ஆற்றில் சாயக்கழிவு கலக்காமல் தடுக்கப்பட்டால், தண்ணீர் தரம் மேம்பட்டு விவசாயம் பாதிப்பின்றி நடைபெறும் என தெரிவித்தனர்.