சேலம் மாநகராட்சி பகுதியில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
டெங்கு உள்ளிட்ட கொசுவழி நோய்களைத் தடுக்கும் பணிகளில் வலுசேர்க்கும் வகையில் 700 தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்ததாவது:
வரும் அக்.1,ம் தேதி முதல் 3 மாத காலத்திற்கு இப்பணியாளர்கள் பணியில் ஈடுபடுவார்கள் எனவும் மழைக்காலத்தில் நோய் பரவலை தடுக்க,வீடு தோறும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துதல்,கொசு வளர்ச்சியை தடுக்கும் ரசாயனங்களைப் பயன்படுத்தி சுத்திகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பணிகளில் அவர்கள் ஈடுபடுவார்கள்,என தெரிவித்தனர்.
மழைக்காலம் முழுவதும் டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவாமல் தடுப்பதற்காக சேலம் மாநகராட்சி சிறப்பு முகாம்கள்,மருத்துவ சேவைகள் மற்றும் கண்காணிப்புப் பணிகளையும், முன்னெடுக்கும் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

-fIdrlif5iv.jpeg )

-hcTFAGMRGb.jpg)