ட்ரெண்டிங்

மாற்றத்திறனாளின் விழிப்புணர்வு பேரணி–சேலத்தில் தொடக்கம் !!!

 

சேலம்:சர்வதேச காதுகேளாதோர் மற்றும் சைகை மொழி வாரத்தையொட்டி, செவித்திறன் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு பேரணி இன்று (செப்.26) மாவட்ட ஆட்சியரகத்தில் இருந்து தொடங்கப்பட்டது.

 

இந்த பேரணியை சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் பிருந்தாதேவி தொடங்கி வைத்தார்.

 

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், சமூகத்தில் அவர்களின் இடம்,மற்றும் சைகை மொழியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் இந்த பேரணி நடைபெற்றது.

 

நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற இப்பேரணியில் பல்வேறு சமூக அமைப்புகள், அரசு அதிகாரிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

 

மாவட்ட நிர்வாகம் சார்பில், மாற்றுத்திறனாளிகள்,நலனுக்கான விழிப்புணர்வு அனைவரிடமும் ஏற்பட வேண்டும் என இந்த பேரணி மூலம் பொதுமக்கள் மத்தியில் வலியுறுத்தப்பட்டது.