ட்ரெண்டிங்

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலைக்கு ரசிகர் மன்றம் !

 

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பூலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த பா.ஜ.க கலை மற்றும் கலாசார பிரிவு மேற்கு மாவட்டத் தலைவர் தங்கமணி, பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு ரசிகர் மன்றம் தொடங்கியுள்ளார்.

 

25 உறுப்பினர்களைக் கொண்டு அண்ணாமலை ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. இதனை சேலம் மேற்கு மாவட்டம் பாஜக தலைவர் ஹரி ராமன் திறந்து வைத்தார்.

 

பாஜக மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை, விரைவில் புதிய அரசியல் கட்சி தொடங்குவதாகச் செய்திகள் பரவி வரும் நிலையில், அண்ணாமலைக்கு ரசிகர் மன்றம் அமைக்கப்பட்டுள்ளது பாஜகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

குறிப்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதியில் அண்ணாமலைக்கு ரசிகர் மன்றம் அமைக்கப்பட்டதன் பின்னணி என்னவாக இருக்கும் என அரசியல் கட்சியினர் குழப்பத்தில் உள்ளவர்கள்.