ட்ரெண்டிங்

கார்த்திகை தீபம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்! 

தொல்காப்பியர் காலத்தில் இருந்தே தமிழகத்தில் கார்த்திகைத் தீபம் கொண்டாடப்பட்டு வருகிறது. திருஞானசம்பந்தர் பூம்பாவைப் பதிகத்தில் கார்த்திகைத் தீபத்தைக் குறிக்கிறார். அகநானூறு, நற்றினை இலக்கியங்களில் கார்த்திகை தீபம் தொடர்பான குறிப்பு இருக்கிறது. 

பழமொழி நானூறில் வரும் குன்றின் மேலிட்ட விளக்கு எனும் சொல்லாடல் கார்த்திகைத் தீபத்தைக் குறிக்கிறது. சங்க காலத்தில் இருந்து தொடர்ந்து வரும் கார்த்திகை நாளில் விளக்கேற்றுவது மரபு. கார்த்திகை நாளில் ஏற்றப்படும் தீபமானது ஞானத்துக்கு தமிழர்கள் செலுத்தும் மரியாதையை குறிக்கிறது. இருளை அகற்றும் ஒளி என்பது, தீமையை அகற்றும் ஒளிதான். அன்பும், சிவனும் வேறு வேறு என்று எண்ணுவோர் அறிவிலார் என்கிறார் திருமூலர். 

கார்த்திகை மாத தீபச் சொக்கப்பனை என்பது சிவனை ஒளி வடிவமாகக் காண்பதன் குறியீடு ஆகும்.