ட்ரெண்டிங்

சேலம் மாநகராட்சி பகுதியில் சுற்றும் தெருநாய்களுக்கு கருத்தடை சிகிச்சை..!!

 

சேலம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சுற்றித்திரியும் தெருநாய்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல் மற்றும் போக்குவரத்திற்கு ஏற்படும் இடையூறுகளை தவிர்க்கும் பொருட்டு தெருநாய்களின் எண்ணிக்கையை படிப்படியாக கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி தெருநாய்களுக்கான இலவச கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் நோய் தடுப்பூசி செலுத்தும் பணியினை மேற்கொள்ள மாநகராட்சி ஆணையாளர் டாக்டர்.மா.இளங்கோவன், அவர்களால் உத்தரவிடப்பட்டது.

 

இந்த உத்தரவைத் தொடர்ந்து தனியார் தொண்டு நிறுவனத்தின் பணியாளர்களை கொண்டு முதற்கட்டமாக 20.08.2025 அன்று அம்மாப்பேட்டை மற்றும் கொண்டலாம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் சுற்றித்திரியும் 27 தெருநாய்கள் பிடிக்கப்பட்டு வாய்க்கால் பட்டறையில் உள்ள தெருநாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டும். மேலும், 18 தெருநாய்களுக்கு இன்று (21.08.2025) மாநகர நல அலுவலர் மரு.ப.ரா.முரளிசங்கர், அவர்களின் முன்னிலையில் கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 

 

இதனைத்தொடர்ந்து இனி வரும் நாட்களில் தெருநாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை தொடர்ந்து நடைபெறும் என ஆணையாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.