ட்ரெண்டிங்

அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம்-ஜி.வி.பிரகாஷ்! 

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தியதில் சுமார் 39 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 100- க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

விஷச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேரில் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். மேலும், மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருபவர்களையும் நேரில் உடல்நலம் விசாரித்து வருகின்றனர். 

அந்த வகையில், நடிகரும், பிரபல திரைப்பட இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், காண்போர் நெஞ்சம் கலங்கி பதறுகிறது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தமிழக அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம். நியாப்படுத்த முடியாத பெருங்குற்றம். இழப்பீடுகள் எதையும் ஈடுகட்டாது , இனி மரணங்கள் நிகழாவண்ணம் தவறு செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்யும் வரை. இவ்வாறு ஜி.வி.பிரகாஷ் குறிப்பிட்டுள்ளார்.