மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் (BSNL), தனது வாடிக்கையாளர்களைக் ஈர்க்கும் வகையில் ரூபாய் 1 கட்டணத்தில் ஆகஸ்ட் மாதம் முழுவதும் 4ஜி சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு தடையில்லா இணைய சேவையை வழங்கும் நோக்கில் சமீபத்தில் நாடு முழுவதும் 4ஜி சேவையை பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது. அதன் தொடர்ச்சியாக, நாட்டின் 79- வது சுதந்திர தினத்தை முன்னிட்டு Freedom Plan என்ற திட்டத்தை பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ளது.
ரூபாய் 1 கட்டணத்தைச் செலுத்தி ஆகஸ்ட் 1- ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31- ஆம் தேதி வரை நாள்தோறும் வரம்பற்ற அழைப்புகள், நாள்தோறும் 2ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் வழங்கப்படும். எனினும், புதிதாக பிஎஸ்என்எல் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கும், மற்ற நிறுவனங்களில் இருந்து பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாறும் வாடிக்கையாளர்களுக்கே இது பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
4ஜி சேவையை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையிலும், ஜியோ, ஏர்டெல் வாடிக்கையாளர்களை பிஎஸ்என்எல் பக்கம் ஈர்க்கும் வகையிலும் புதிய பிளான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


