ட்ரெண்டிங்

சேலம் இரும்பாலையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை பார்வையிட்ட மத்திய அமைச்சர்! 

 


மத்திய கனரக தொழில்துறை மற்றும் எஃகுத்துறை அமைச்சர் ஹெச்.டி.குமாரசாமி, சேலம் இரும்பாலையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, இரும்பாலையில் உற்பத்தி செய்யப்படும் துருப்பிடிக்காத எஃகு, Roof sheets, எல்பிஜி சிலிண்டர்கள், நாணயங்கள், எஸ்எஸ் பைப்ஸ், submersible மோட்டார் பம்ப்புகளின் உதிரி பாகங்கள், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு அனுப்பப்படும் லட்டுக்கான டிரேக்கள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார். மத்திய அமைச்சருக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். 

அத்துடன், இரும்பாலையில் செய்யப்பட வேண்டிய பணிகள், ஆலையில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் ஹெச்.டி.குமாரசாமி தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டமும், இரும்பாலை வளாகத்தில் உள்ள அரங்கத்தில் நடைபெற்றது. 

கூட்டத்தில், சேலம் இரும்பாலையில் உற்பத்தியை அதிகரிப்பது, வருவாயை பெருக்குவது, புதிய பொருட்களை உற்பத்தி செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

முன்னதாக, சேலம் இரும்பாலையில் மத்திய அமைச்சருக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அணிவகுப்பு மரியாதை அளித்தனர். அதனை ஏற்றுக் கொண்ட அவர், இரும்பாலை வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.