சேலம் மாவட்டம், கொண்டப்பநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூபாய் 58 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நான்கு புதிய வகுப்பறைகள் கட்டடம் மற்றும் பள்ளி மேம்பாட்டு திட்டப் பணிகளை இன்று (ஜன.24) தி.மு.க.வின் சேலம் மத்திய மாவட்டச் செயலாளரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான ராஜேந்திரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய திருவள்ளுவர் சிலையையும் திறந்து வைத்த அமைச்சர், மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினார். அத்துடன், வகுப்பறைகளை நேரில் பார்வையிட்டு, ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப., சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் மற்றும் பள்ளி வளர்ச்சிக்குழு நன்கொடையாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள், தலைமையாசிரியர், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


-SXgDfGgJfO.jpg)