சேலம் மாவட்டம், கருமந்துறையில் உள்ள அரசினர் பழங்குடியினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. தெரிவித்துள்ளதாவது, கருமந்துறை அரசு பழங்குடியினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025-ஆம் ஆண்டு நேரடி சேர்க்கையானது நடைபெற்று வருகிறது. இந்நிலையத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மின்சாரப் பணியாளர் (Electrician), பொருத்துநர் (Fitter), கம்மியர் மோட்டார் வண்டி (Mechanic Motor Vehicle) மற்றும் தொழிற்சாலைகளின் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப புதியதாக தொடங்க உள்ள Technology Centre 4.0-ல் மேம்படுத்தப்பட்ட இயந்திர தொழில் நுட்பவியலாளர் (Advanced CNC Machining Technician) கம்மியர் மின்சார வாகனம் (Mechanic Electrical Vehicle), தொழில்துறை எந்திரவியல் மற்றும் எண்ணியல் உற்பத்தி தொழில் நுட்பவியலாளர் (Industrial Robotics and Digital Manufacturing) ஆகிய தொழிற்பிரிவுகளும், 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு குழாய் பொருத்துபவர் (Plumber) ஆகிய தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயில நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது. இவ்வாய்ப்பினை நன்கு பயன்படுத்தி மாணவ, மாணவிகள் இத்தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயில கேட்டுக்கொள்ளப்படுகிறது.
குறிப்பாக, பயிற்சி பெறும் பயிற்சியாளர்களுக்கு தமிழ்நாடு அரசால் இலவசமாக மாதம் ரூபாய் 750 உதவித் தொகை, தமிழ்புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டங்களில் தகுதியுள்ள மாணவ, மாணவிகளுக்கு மாதம் தலா ரூ.1,000 மிதிவண்டி, சீருடையுடன் கூடிய தையற்கூலி. காலணி, வரைபடக் கருவி, பாடப் புத்தகம், கட்டணமில்லா பேருந்து வசதி மற்றும் பல சலுகைகள் வழங்கப்படும். மேலும் பயிற்சி முடித்த உடன் முன்னணி நிறுவனங்களின் மூலம் Campus Interview மூலம் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும்.
2025- 2026 ஆம் ஆண்டு நேரடி சேர்க்கை கருமந்துறை அரசு தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கை உதவி மையம் மூலமாக பதிவு செய்து தரப்படும் என்பதால் மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் கைபேசி எண்,மின்னஞ்சல் முகவரி, ஆதார் அட்டை, சாதிச் சான்றிதழ், முன்னுரிமை கோரினால் முன்னுரிமை சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களைக் கொண்டு வர வேண்டும் மற்றும் விண்ணப்பக் கட்டணம் ரூபாய் 50-ஐ பணமாக மின்னணு பரிவர்த்தனை மூலமாக செலுத்தலாம்.
கூடுதல் விவரங்களுக்கு அரசு பழங்குடியினர் தொழிற் பயிற்சி நிலையத்தின் முதல்வரை நேரிலோ அல்லது 94438-23985, 98425-22905, 98419-08820, 86672-18651 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


