ட்ரெண்டிங்

மாநகராட்சியின் 25- வது ஆணையாளராக ரஞ்சித் சிங் பொறுப்பேற்பு! 


சேலம் மாநகராட்சியின் 25 ஆவது ஆணையாளராக ரஞ்சித் சிங் இன்று (ஜூலை 25) காலை 11.00 மணிக்கு பதவி ஏற்று கொண்டார். இதனையடுத்து, சேலம் மாநகராட்சி ஆணையாளர் அலுவலகத்திற்கு வந்திருந்த அவர் அதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டார். 

அப்போது அவருக்கு அரசு அதிகாரிகள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர். முன்னதாக மாநகராட்சி மைய அலுவலகத்திற்கு வந்தவர் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். 

இதற்கு முன்பு நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை முகமையின் இணை இயக்குனராக பணியாற்றி வந்தார். ஏற்கனவே சேலம் மாநகராட்சி ஆணையாளராக பணிகள் பணியாற்றி வந்த பாலச்சந்தர் தாம்பரம் மாநகராட்சிக்கு ஆணையாளராக மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, ரஞ்சித் சிங் சேலம் மாநகராட்சி ஆணையாளராக பதவி ஏற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சேலம் மாநகராட்சியின் புதிய ஆணையாளராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ரஞ்சித் சிங்-கை மாநகராட்சி அலுவலகத்தில் நேரில் சந்தித்து மாமன்ற உறுப்பினர்கள் திருஞானம், தெய்வலிங்கம் ஆகியோர் பொன்னாடை அணிவித்து நேரில் வாழ்த்துத் தெரிவித்தனர்.