ட்ரெண்டிங்

சுகவனேஸ்வரர் கோயில் திருமண மண்டபம் திறப்பு! 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலிக் காட்சியின் வாயிலாக இன்று (ஜூன் 18) இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் சேலம் அருள்மிகு சுகவனேஸ்வரர் சுவாமி திருக்கோயிலுக்கு ரூபாய் 3.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய திருமண மண்டபத்தினைத் திறந்து வைத்ததைத் தொடர்ந்து, சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி பங்கேற்றார். 

பின்னர், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை வாயிலாக திருக்கோவில்களின் வளர்ச்சிக்கான அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்கத் திட்டம், பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல் திருக்கோவிலுக்குச் சொந்தமான நிலங்கள் மீட்பு, திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு, திருக்குளங்களை புனரமைத்தல், திருக்கோவில்களில் திருப்பணிகள் போன்ற பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருவதுடன், சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்புகளையும் விரைவாக நிறைவேற்றி வருகிறார். 

அந்த வகையில் இன்றைய தினம் சென்னையிலிருந்து காணொளிக் காட்சியின் வாயிலாக சேலம் அருள்மிகு சுகவனேஸ்வரர் சுவாமி திருக்கோவிலுக்கு ரூபாய் 3.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய திருமண மண்டபத்தினைத் திறந்து வைத்துள்ளார். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், துணை மேயர் சாரதாதேவி, அறங்காவலர்கள் குழுத்தலைவர் வள்ளியப்பா, சேலம் வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சபர்மதி, உதவி ஆணையர் அம்சா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.