ட்ரெண்டிங்

கடந்த ஆண்டு 111 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

 

சேலம் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்கும் வகையில் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வப்போது, அடிக்கடி வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர். 

 

இது குறித்து குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கூறுகையில், சேலம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசி உள்ளிட்டப் பொருட்கள் கடத்துபவர்களை கைது செய்து வருகிறோம். கடந்த ஆண்டில் மட்டும் இந்த குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக 387 பேரை கைது செய்துள்ளோம். 

 

அவர்களிடம் இருந்து 111 டன் ரேஷன் அரிசி மற்றும் 200 கிலோ ரேஷன் துவரம் பருப்பு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன், 38 இருசக்கர வாகனங்கள், 2 மூன்று சக்கர வாகனங்கள் என மொத்தம் 70- க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அத்தியவாசியப் பொருட்கள் கடத்தம் மற்றும் பதுக்கலில் ஈடுபட்டதால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.