தமிழகத்தில் நடைபெற்ற 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான மாநிலங்களவைத் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா, வழக்கறிஞர் வில்சன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மற்றும் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அ.தி.மு.க.வின் வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் வழக்கறிஞர் இன்பதுரை மற்றும் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அ.தி.மு.க அவைத் தலைவர் தனபால் ஆகியோர் ஒருமனதாகப் போட்டியின்றித் தேர்வுச் செய்யப்பட்டனர்.
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களை ஆறு பேரும் பெற்றுக் கொண்டனர். இதையடுத்து, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு வெற்றி பெற்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் வழக்கறிஞர் இன்பதுரை, தனபால் ஆகியோர் வெற்றி சான்றிதழைக் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.



