ட்ரெண்டிங்

அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர அழைப்பு! 

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. தெரிவித்துள்ளார். 

இது குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதாவது, 2025-ஆம் ஆண்டில் சேலம், சேலம் (மகளிர்), மேட்டூர் அணை மற்றும் கருமந்துறை (பழங்குடியினர்) ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேரவும். தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களான சேலம் பாலிடெக்னிக் ஐடிஐ. சேலம் மற்றும் வேல்ஸ் ஐடிஐ, மேட்டூர் ஆகிய தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு சேரவும், https://skilltraining.tn.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக தொழிற்பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இணையதளம் வாயிலாக விண்ணப்பிப்பது தொடர்பாக சம்மந்தப்பட்ட தொழிற்பயிற்சி நிலையங்களை நேரில் அணுகவும். 

வெல்டர். பெயிண்டர்(பொது), வயர்மேன், பிளம்பர் போன்ற பிரிவுகளுக்கு 8- ம் வகுப்பிலும் எலக்ட்ரீசியன், விட்டர். மெசினிஸ்ட், கிரைண்டர், டர்னர், மோட்டார் மெக்கானிக் AC மெக்கானிக், கோபா மற்றும் தொழிற்சாலைகளின் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தொடங்கப்பட்ட Technology centre 4.0-ல் மேனுபேக்சரிங் ப்ராஸஸ் கண்ரோல் & ஆட்டோமேசன், இன்டஸ்ரியல் ரோபோட்டிக்ஸ் & டிஜிட்டல் மேனுபேக்சரிங் டெக்னிசியன். மெக்கானிக் எலக்ட்ரிக் வாகனம் அட்வான்ஸ் சிஎன்சி மெசினிங் டெக்னிசியன், பேசிக் டிசைனர் & விர்சுவல் வெரிபையர் போன்ற பிரிவுகளுக்கு 10-ஆம் வகுப்பிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

மாற்றுச் சான்றிதழ் மதிப்பெண் சான்றிதழ், சாதிச்சான்றிதழ், கைபேசி எண், e-mail id, ஆதார் அட்டை மற்றும் முன்னுரிமை கோரினால் முன்னுரிமைச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய அசல் ஆவணங்களுடன் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள சேர்க்கை உதவி மையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக்கட்டணம் ரூபாய் 50 (Debit card/Gpay அல்லது Net banking) மூலம் செலுத்தலாம். பயிற்சி பெறுபவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூபாய் 750 பாடநூல், சைக்கிள், சீருடை, வரைபடக் கருவி, காலணி, பஸ் பாஸ் மற்றும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பெண் பயிற்சியாளர்களுக்கும் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் ஆண் பயிற்சியாளர்களுக்கும் மாதந்தோறும் ரூபாய் 1,000 உதவித்தொகை வழங்கப்படும்.

மேலும் பயிற்சி முடித்த பின் அரசு மற்றும் முன்னனி நிறுவனங்களில் campus Interview மூலம் வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும். மகளிருக்கு குறைந்தபட்ச வயது 14 மற்றும் வயது உச்ச வரம்பு இல்லை. ஆண்களுக்கு வயது வரம்பு 14 முதல் 40 வயது வரை ஆகும். இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய வரும் ஜூன் 13- ஆம் தேதி கடைசி நாளாகும். சேர்க்கை தொடர்பாக கோரிமேடு அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தையும் அணுகலாம். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.