ட்ரெண்டிங்

ஏற்காட்டிற்கு செல்லத் தயாரா?- கோலாகலமாக நாளை தொடங்குகிறது கோடை விழா! 

 

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 48-வது கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி வரும் மே 23- ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கி வரும் மே 29- ஆம் தேதி வியாழக்கிழமை வரை 7 நாட்கள் நடைபெறவுள்ளதையொட்டி, சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் மகிழ்விக்கும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளதாவது, சேலம் மாவட்டம், ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் 48-வது கோடை விழா மற்றும் மலர்க்காட்சி வரும் வரும் மே 23- ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று முதல் மே 29- ஆம் தேதி வியாழக்கிழமை வரை 7 நாட்கள் நடைபெறவுள்ளது. 

சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள். குழந்தைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்கும் வகையில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. 
அந்த வகையில் நாளை (மே 23) காலை 7 மணியளவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறையின் சார்பில் ஏற்காடு மலைப்பாதையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மலையேற்றம், அதனை தொடர்ந்து ஏற்காடு கலையரங்கத்தில் சுற்றுலாத்துறையின் சார்பில் சேலம். சிலம்பிசை சிலம்பாட்ட குழுவினரின் புலியாட்டம் மற்றும் சிலம்பாட்ட நிகழ்ச்சியும், மாமல்லபுரம் விநாயகா நாட்டியாலயா கலைக்குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சியும்.மதுரை தட்சிணாமூர்த்தி கலைக்குழுவினரின் நாட்டுப்புற நிகழ்ச்சியும், ஸ்டெப் அப் நடனக் குழுவினரின் மேற்கத்திய நடன நிகழ்ச்சிகளும் நடத்தப்படவுள்ளது. 

அதேபோன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறையின் சார்பில் வரும் மே 24- ஆம் தேதி  அன்று காலை 10 மணியளவில் ரெட்டிரீட் விளையாட்டு மைதானத்தில் ஆண்களுக்கான கால்பந்து பேட்டியும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி துறையின் சார்பில் ஏற்காடு கலையரங்கத்தில் குழந்தைகளுக்கான இளம்தளிர் நடைப்போட்டி, அடுப்பில்லா சமையல் போட்டி, நடைவண்டி போட்டி. உப்பு மூட்டை துக்குதல் போட்டி, தவலும் போட்டிகளும், சுற்றுலாத்துறையின் சார்பில் ஏற்காடு கலையரங்கத்தில் புதுக்கோட்டை ஆனந்தம் நடன அகாடமி குழுவினரின் நாட்டுப்புற நடனமும். ஈசா கேந்திரா கலாச்சார அகாடமி குழுவினரின் பல்சுவை நிகழ்ச்சியும், திண்டுக்கல் இதயா அகாடமி குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சியும், மதுரை யுத்தாரா னலைக்கூடம் குழுவினரின் மேற்கத்திய நடன நிகழ்ச்சிகளும் நடத்தப்படவுள்ளது. 

கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் மே 25- ஆம் தேதி அன்று ஏற்காட்டில் உள்ள திறந்த வெளி அரங்கத்தில் நாய்கள் கண்காட்சியும், சுற்றுலாத்துறையின் சார்பில் ஏற்காடு கலையரங்கத்தில் சேலம் சிலம்பரசன் மிமிக்கிரி நிகழ்ச்சியும், குரு ஆர்கெஸ்ட்ரா குழுவினரின் ஆர்கெஸ்ட்ரா நிகழ்ச்சியும், சென்னை நளினி அகாடமி குழுவினரின் செமி கிளாசிக் நடன நிகழ்ச்சியும், கலைப்பண்பாட்டுத்துறையின் சார்பில் சேர்வராயன் மலைகாராளர் கோலாட்டக் கலைக்குழுவினரின் கோலாட்ட நிகழ்ச்சியும், சிவசக்தி பம்பை இசைக்குழுவினரின் பம்பை இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்படவுள்ளது. 

மேலும், 26.03.2025 அன்று காலை 10 மணிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறையின் சார்பில் ரெட்டிரீட் விளையாட்டு மைதானத்தில் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கான குண்டு எறிதல் மற்றும் medicine ball throw போட்டியும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ஏற்காடு படகு இல்லத்தில் படகுப்போட்டியும், சுற்றுலாத்துறையின் சார்பில் ஏற்காடு கலையரங்கத்தில் கலைமாமணி இறையன்பன் குத்தூஸ் அவர்களின் இனஎழுச்சி பாடல்கள் நிகழ்ச்சியும், சென்னை ஸ்ரீ நாட்டிய கலா மந்திர் கலைப்பள்ளியின் பாரம்பரிய நடன நிகழ்ச்சியும். பாலக்காடு மோகினி ஆட்டம் நடன நிகழ்ச்சியும், puppet show நிகழ்ச்சிகளும் நடத்தப்படவுள்ளது. 

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறையின் சார்பில் மே 27- ஆம் தேதி அன்று காலை 10 மணிக்கு ரெட்டிரீட் விளையாட்டு மைதானத்தில் பத்திரிக்கையாளர்களுக்கான கிரிக்கெட் போட்டியும், சுற்றுலாத்துறையின் சார்பில் ஏற்காடு கலையரங்கத்தில் சென்னை வெங்கடாஜலபதி நாடக சபாவினரின் 
விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியும், சென்னை நிருத்திய நித்யாலயாவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சியும். கலைமாமணி இறையன்பன் குத்தூஸ் அவர்களின் இனஎழுச்சி பாடல்கள் நிகழ்ச்சியும், திருச்செங்கோடு சாக்ஸ்கோன் இன்னிசை நிகழ்ச்சியும், sangams art studio -ன் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படவுள்ளது. 

வரும் மே 28- ஆம் தேதி அன்று சுற்றுலாத்துறையின் சார்பில் ஏற்காடு கலையரங்கத்தில் நாராயணன் கலைக்குழுவினரின் பல்சுவை நிகழ்ச்சியும், பிரதிபா பாபு கரோக்கியின் changai magic voice நிகழ்ச்சியும், கதக் மற்றும் குச்சிபுடி நடனமும், கலாசக்தி நாட்டியாலயா குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சியும், விஜய் கோவிந்த் மேற்கத்திய டான்ஸ் அகாடமி குழுவினரின் நடன நிகழ்ச்சியும், ருத்ராட்சா டான்ஸ் அகாடமி குழுவினரின் கிராமிய நடனம் நிகழ்ச்சிகளும் நடத்தப்படவுள்ளது. 

வரும் மே 29- ஆம் தேதி அன்று கலைப்பண்பாட்டுத்துறையின் சார்பில் ஏற்காடு கலையரங்கத்தில் ஸ்ரீ முருகன் குழுவினரின் நையாண்டி மேளம் மற்றும் கரகாட்டம் நிகழ்ச்சிகளும், சேலம் பழநியாண்டவர் தப்பாட்டக் கலைக்குழுவினரின் தப்பாட்ட நிகழ்ச்சியும், சேலம் மதுரை ருத்ரா டான்ஸ் அகாடமி குழுவினரின் பரதநாட்டி நிகழ்ச்சிகளும் நடத்தப்படவுள்ளது. 

ஏற்காடு கோடைவிழா நடைபெறும் அனைத்து நாட்களிலும் கலை பண்பாட்டுத்துறை, சுற்றுலாத்துறை சார்பில் சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.