ட்ரெண்டிங்

சேலத்தில் 89 பள்ளிகள் 100% தேர்ச்சி! 


தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவ, மாணவிகளுக்கான தேர்வு முடிவுகளை சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (மே 08) காலை 09.00 மணிக்கு வெளியிட்டார். 

தமிழக அளவில் தேர்ச்சி விகிதத்தில் அரியலூர் மாவட்டம் 98.82 சதவீதத்துடன் முதலிடமும், ஈரோடு மாவட்டம் 97.98 சதவீதத்துடன் இரண்டாமிடமும், திருப்பூர் மாவட்டம் 97.53 சதவீதத்துடன் மூன்றாமிடமும் பிடித்துள்ளன. சேலம் மாவட்டம் 94.32 சதவீதத்துடன் 26- வது இடத்தில் உள்ளது. 

சேலம் மாவட்டத்தில் தனியார், அரசுப் பள்ளிகள் என 320 பள்ளிகளில் 89 பள்ளிகள் 100% தேர்ச்சியைப் பெற்றுள்ளன. 17,185 மாணவர்களும், 19,709 மாணவிகளும் என மொத்தம் 36,894 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதினர். இதில் 15,876 மாணவர்களும், 18,921 மாணவிகளும் என மொத்தம் 34,797 மாணவ, மாணவிகள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். 

வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே தேர்ச்சி விகிதத்தில் முதலிடத்தில் உள்ளனர். சேலத்தில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 92.38% ஆகவும், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 96.00% ஆகவும் உள்ளது.