ட்ரெண்டிங்

பெரியார் பல்கலைக்கழகத்தில் குரூப் 4 இலவச பயிற்சி வகுப்புகள்! 

சேலம் பெரியார் பல்கலைக்கழகக் குடிமையியல் பணித் தேர்வுப் பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் மையம் UPSC/SSC/NET/SLET/TNPSC மற்றும் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகளை நடத்திக் கொண்டிருக்கிறது. 

தற்போது, பெரியார் பல்கலைக்கழகக் குடிமையியல் பணித் தேர்வுப் பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் மையமும் மற்றும் சேலம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையமும் இணைந்து நடத்தும் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்விற்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் பெரியார் பல்கலைக்கழகத்தில் வரும் மே 05- ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. இப்பயிற்சி வகுப்பில் பெரியார் பல்கலைக்கழக மாணாக்கர்கள் மட்டுமின்றி வெளியில் இருந்து போட்டித் தேர்விற்குத் தயாராகும் மாணவர்களும் சேர்ந்து பயன்பெறலாம். 

இப்பயிற்சி வகுப்பு திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00 மணிக்குத் துவங்கி பிற்பகல் 01.00 மணி வரை நடைபெறும். பெரியார் பல்கலைக்கழக நூலகத்தில் செயல்படும் குடிமையியல் பணித் தேர்வுப் பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் மையத்தில் தங்களின் பெயரை பதிவு செய்து, பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன் பெறுமாறு பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் ஜெகநாதன் தெரிவித்துள்ளார். கூடுதல் விவரங்களுக்கு 97893-19722 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புக் கொள்ளலாம்.