ட்ரெண்டிங்

சேலத்தில் வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை எவ்வளவு தெரியுமா? 

சேலத்தில் வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 1,854.50 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. இதில் கேஸ் சிலிண்டர் விலை மாதந்தோறும் மே 01- ஆம் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 

14.2 கிலோ வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை கடந்த ஓராண்டாக ஒரே விலையில் இருந்த நிலையில் கடந்த ஏப்ரல் 08- ஆம் தேதி திடீரென ரூபாய் 50 அதிகரித்தனர். இந்நிலையில் நடப்பு மாதத்திற்கான புதிய விலை பட்டியலை நேற்று அதிகாலை எண்ணெய் நிறுவனங்கள் கூட்டமைப்பு வெளியிட்டது. அதில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. 

அதாவது கடந்த ஏப்ரல் மாத விலையிலேயே ரூபாய் 886.50 என்ற விலையில் சேலத்தில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விற்பனை செய்யப்படுகிறது. அதே வேளையில் 19 கிலோ எடைக்கொண்ட வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 14.50 முதல் ரூபாய் 17 வரை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, சேலத்தில் வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 1,870.50- லிருந்து ரூபாய் 16 குறைந்து 1,854.50 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.