கோடைக்கால விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக கூடுதல் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்து வருகிறது. அதன்படி, சேலம் வழியாக பெங்களூரு- மதுரை இடையே சிறப்பு ரயில்கள் (06521/ 06522) அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் ஏப்ரல் 30- ஆம் தேதி பெங்களூருவில் இருந்து மதுரைக்கும், மே 01- ஆம் தேதி மதுரையில் இருந்து பெங்களூருவுக்கும் கோடைக்கால சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில்கள், கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு ஆகிய ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும்.
இந்த ரயில் சேலம் ரயில் நிலையத்தில் சுமார் 10 நிமிடங்கள் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


-SXgDfGgJfO.jpg)