ட்ரெண்டிங்

ரூ.35,000 சம்பளம்- தற்காலிக பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு! 


சேலம் மாவட்ட திட்ட மேலாண்மை அலகில் தற்காலிகமாக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. தெரிவித்துள்ளதாவது, சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் தூய்மை பாரத இயக்கம் ஊரகம் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவில் மாவட்ட திட்ட மேலாண்மை அலகு மற்றும் தகவல் தொடர்பு (IEC) மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்திற்கு திட்டமிடுதல், ஒருங்கிணைத்தல் மற்றும் கண்காணித்தல் பிரிவில் மாதம் ரூபாய் 35,000/- மதிப்பூதியத்தில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் B.Tech, M.B.A., M.Sc. (அல்லது) அதற்கு இணையான கல்வித்தகுதி முடித்திருக்கும் ஒரு நபர் தேர்வு செய்யப்பட உள்ளார். 

தூய்மை பாரத இயக்கம்- ஊரகம் திட்டத்தின் கீழ் மாவட்ட திட்ட மேலாண்மை அலகு மையத்தில் தற்காலிகமாக பணியாற்றி தகுதியான விண்ணப்பதாரர்கள் வருகின்ற ஏப்ரல் 25- ஆம் தேதிக்குள் சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் அறை எண் 207-ல் உள்ள நகர்ப்புற வாழ்வாதார மையம் மேலாளரிடம் தங்களது கல்வித்தகுதி மற்றும் பணி அனுபவம் குறித்த சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தை நேரிலோ (அல்லது) அஞ்சல் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.