மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, நாளை (ஏப்ரல் 10) சேலம் மாவட்டத்தில் உள்ள மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களை மூட மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளதாவது, மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு மதுபானக்கடைகள் மூடப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து எப்.எல்.1, எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ மற்றும் எப்.எல்.3ஏஏ உரிமம் பெற்ற ஹோட்டல் மற்றும் கிளப்புகளில் இயங்கிவரும் மதுபானக் கூடங்கள், டாஸ்மாக் மதுபானக் கடைகள் (எப்.எல்.11) மற்றும் டாஸ்மாக் மதுபானக் கடைகளுடன் இணைந்துள்ள மதுபானக் கூடங்கள் அனைத்தும் நாளை மகாவீர் ஜெயந்தி அன்று மூடப்பட வேண்டுமெனவும், மேலும் அன்றைய தினம் இதனை மீறி விற்பனை செய்பவர்கள் மீது அரசு விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


