ட்ரெண்டிங்

குவாரி குத்தகை உரிமம் பெற இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்! 

குவாரி குத்தகை உரிமம் பெற இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. தெரிவித்துள்ளதாவது, சேலம் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகத்தில் இதுநாள் வரை குவாரி குத்தகை உரிமம் வேண்டி வரப்பெற்ற விண்ணப்பங்கள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமோ பெறப்பட்டு உரிமம் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. 

இந்நிலையில், அரசு வழிகாட்டுதலின்படி 2025-26-ம் நிதியாண்டில் சேலம் மாவட்டத்தில் வருகின்ற ஏப்ரல் 15 முதல் குவாரி குத்தகை உரிமம் கோரி விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் அனைத்தும் https://www.mimas.tn.gov.in என்ற இணையதளம் மூலம் மட்டுமே பெறப்படும். 

எனவே, விண்ணப்பதாரர்கள் இனிவரும் காலங்களில் இணைய வழியில் (Online) மட்டுமே விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.