தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டும். வரும் அக்.26, நவ.2,9,16 ஆகிய தேதிகளில் கோவையில் இருந்து பாராவுனிக்கும் (ரயில் எண் 06055), மறுமார்க்கத்தில், அக்.29, நவ.5,12,19 தேதிகளில் பாராவுனியில் கோவைக்கும் (ரயில் எண் 06056) சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
இந்த சிறப்பு ரயில் திருப்பூர், சேலம், ஈரோடு, ஜோலார்பேட்டை,பெரம்பூர், விஜயவாடா, சாம்பல்பூர், தன்பாத் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும். சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு ரயிலுக்காக டிக்கெட் முன்பதிவுத் தொடங்கியுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு https://www.irctc.co.in என்ற இணையதளத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



