ட்ரெண்டிங்

ரயில்களில் விதிமீறல்- ஓராண்டில் ரூபாய் 22 கோடி அபராதம் வசூல்!

சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் நிலையங்கள், ரயில்களில், டிக்கெட் பரிசோதகர்கள், ரயில்வே பாதுகாப்பு படையினர் அடங்கிய குழுவினர் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர். 

கடந்த 2024- ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் நடப்பாண்டு மார்ச் மாதம் வரை ஓராண்டில் மேற்கொண்ட சோதனையில் டிக்கெட் இல்லாமல் பயணித்த 1.64 லட்சம் பேரிடம் ரூபாய் 13.53 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் முறையான டிக்கெட் இன்றி பயணித்தோரிடம் ரூபாய் 8.56 கோடி, கூடுதல் லக்கேஜ் ஏற்றிச் சென்றோரிடம் ரூபாய் 4.74 லட்சம் உள்பட ரூபாய் 22.13 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. 

இதுவே கடந்த 2023-24-ல் ரூபாய் 19.03 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டிருந்தது. கடந்த மார்ச் மாதம் மட்டும் டிக்கெட் இன்றி பயணம் மேற்கொண்டோரிடம் ரூபாய் 1.37 கோடியும், முறையான டிக்கெட் இன்றி பயணித்தோரிடம் ரூபாய் 84.44 லட்சமும், கூடுதல் லக்கேஜ் எடுத்துச் சென்றோரிடம் ரூபாய் 43,487- ம் என ரூபாய் 2.22 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டிருந்தது.