ட்ரெண்டிங்

விவசாயிகளுக்கு ரூபாய் 1,042 கோடி பயிர்க்கடன்!

சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் 1.10 லட்சம் விவசாயிகளுக்கு ரூபாய் 1,042 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. இலக்கை விட கூடுதலாக பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. 

இது குறித்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் அதிகாரிகள் கூறுகையில், சேலம் மாவட்டத்தில் இலக்கை விட கூடுதலாக ரூபாய் 1,042 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சுமார் 1.10 லட்சம் விவசாயிகள் பயனாபெற்றுள்ளனர். 

7,000 புதிய உறுப்பினர்களுக்கு ரூபாய் 62 கோடிக்கு மேல் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மற்றும் உறுப்பினர்கள் தங்களது பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி அந்தந்த கடனுக்குரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து பயிர்க்கடன் மற்றும் கால்நடை பராமரிப்பு கடன் உள்ளிட்ட கூட்டுறவு சங்கங்களில் வழங்கப்படும். அனைத்து விதமான கடன்களையும் பெற்று பயனடையலாம் எனத் தெரிவித்துள்ளனர்.