ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு கொச்சுவேலி- சென்னை சென்ட்ரல் இடையே இருமார்க்கத்திலும் சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் செப்.16-ம் தேதி கேரள மாநிலம், கொச்சுவேலியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கும், மறுமார்க்கத்தில், செப்.17- ம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து கொச்சுவேலிக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சிறப்பு ரயில், சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும். சிறப்பு ரயிலுக்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவுத் தொடங்கியுள்ளது. இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


