சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட சொத்து உரிமையாளர்கள், நடப்பாண்டு வரிகளை வரும் ஏப்ரல் 30- ஆம் தேதிக்குள் செலுத்தி வரியில் 5 சதவீதம் அல்லது 5,000 ரூபாய் ஊக்கத்தொகை பெறலாம் என மாநகராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார்.
வரி வசூலிப்பாளர்கள், அஸ்தம்பட்டி, சூரமங்கலம், கொண்டலாம்பட்டி, அம்மாப்பேட்டை ஆகிய மண்டலங்களில் உள்ள வரி வசூல் மையங்கள், காசோலை, வரைவோலை, https://tnurbanepay.tn.gov.in என்ற இணைய வழி பரிவர்த்தனை, மொபைல் செயலியில் கூகுள்பே, போன்பே வழியாகவும் செலுத்தி ஊக்கத்தொகை பெறலாம்.
மக்கள் நலன் கருதி, ஏப்.30 வரை சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் வரி வசூல் மையங்கள் செயல்படும் என மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.


