தமிழகத்தில் மேலும் 2 புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் சென்னை எழும்பூர்- நாகர்கோவில், மதுரை- பெங்களூரு இடையேயான 2 புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஆகஸ்ட் 31) நண்பகல் 12.30 மணியளவில் டெல்லியில் இருந்தவாறு காணொளி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.
மதுரை- பெங்களூரு இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணராஜபுரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று தொடங்கி வைக்கப்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் வரும் செப்டம்பர் 02- ஆம் தேதி முதல் செயல்பாட்டு வரும்; இதற்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்திய ரயில்வேயின் https://www.irctc.co.in/nget/ என்ற இணையதளத்திற்கு சென்று பயண டிக்கெட்டை முன்பதிவுச் செய்துக் கொள்ளலாம்.
தமிழகத்தில் ஏற்கனவே 6 வந்தே பாரத் ரயில்கள் செயல்பாட்டில் உள்ள நிலையில், மேலும் 2 புதிய வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


-SXgDfGgJfO.jpg)