கோடைக்காலத்தை முன்னிட்டு ரயில் கொள்ளையைத் தடுக்கும் வகையில் ஆந்திரா, கேரளா செல்லும் ரயில்களில் காவல்துறையினருடன், ரயில்வே பாதுகாப்புப் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநிலங்களில் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் ரயில்களில் நகைப்பறிப்பு சம்பவங்கள் நடந்து வருகிறது. ஓடும் ரயிலில், பெண்களிடம் நகைகளைக் கொள்ளையடித்து கொண்டு நடுவழியில் ரயிலை நிறுத்த செய்துவிட்டு தப்பியோடும் பழக்கத்தை வடமாநில கொள்ளை கும்பல் தொடர்ந்து மேற்கொண்டுள்ளது.
இதனால் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து கோடை காலத்தில் தமிழகத்தில் ரயில் கொள்ளை சம்பவங்கள் நடக்கிறது. உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார், ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த இக்கொள்ளை கும்பல், சீசன் திருட்டாக கோடைக்காலத்தில் தென் மாநிலங்களுக்கு படையெடுத்து வருவது வழக்கம்.
ஆந்திரா, கேரளா மாநிலங்களில் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் ரயில்களில் நகைப்பறிப்பு சம்பவங்கள் நடந்து வருகிறது. ஓடும் ரயிலில், பெண்களிடம் நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு, நடுவழியில் ரயிலை நிறுத்தச் செய்து விட்டு தப்பியோடும் பழக்கத்தை வட மாநில கொள்ளை கும்பல் தொடர்ந்து மேற்கொண்டுள்ளது. கடந்த மாதம், நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் காவிரி ஆர்.எஸ்.புரம் பகுதியில் ரயில் சென்றபெண் பயணியிடம் 6 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே, பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தும் வகையில், ரயில்வே போலீசாரும், ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதற்காக ஒவ்வொரு ரயில்வே போலீஸ் ஸ்டேஷனிலும், கோடை கால கண்காணிப்பு பணிக்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் ரயில்களிலும், ஸ்டேஷன்களிலும் இரவு ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதன்படி, சேலம் ரயில்வே எல்லை பகுதிக்குட்பட்ட ஜோலார்பேட்டை மார்க்கமாக பெங்களூருவுக்கு செல்லும் ரயில்களிலும் சேலம் வழியாக ஆந்திரா, கேரளா செல்லும் ரயில்களிலும், ரயில்வே போலீசாரும், ரயில்வே பாதுகாப்புப் படையினரும் இனைந்து இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் சிக்னல் உள்ள பகுதிகளில் கூடுதலாக உள்ளூர் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், வட மாநில கொள்ளையர்கள் நடமாட்டம் குறித்து, பழைய குற்றவாளிகளின் புகைப்படங்களை வைத்து ரயிலில் ரோந்து பணியில் ஈடுபட்டு போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
சந்தேகப்படும் படி ரயிலில் சுற்றித்திரிபவர்களையும் பிடித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

-fronx-cng-5ykZUwdqtw.jpg )

-hcTFAGMRGb.jpg)