சேலத்தில் வெயிலின் தாக்கல் அதிகரிப்பால் வெள்ளரிக்காய் விலை உயர்ந்து கிலோ ரூபாய் 200 வரை விற்பனை செய்யப்படுகிறது.
சேலத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக 100 டிகிரியைத் தாண்டி வெயில் சுட்டெரித்து வருவதை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மதிய வேளையில் அனல் காற்று வீசுகிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். வெயில் அதிகரிப்பால் முதியவர்கள் உள்பட பலர் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை.
வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்து கொள்வதற்கு பலர் தர்பூசணி, இளநீர், மோர், கம்மங்கூழ், பழ ஜூஸ் ஆகியவற்றை வாங்கிச் சாப்பிட்டு வருகின்றனர். இதனால் அந்த கடைகளில் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. இதுபோல் மாநகரில் கடைவீதி, செவ்வாய்ப்பேட்டை, ஆட்சியை அலுவலகம் அருகே வெள்ளரிக்காய் கடை போடப்பட்டது. அதனை மக்கள் அதிகளவில் வாங்கி சாப்பிடுகின்றனர்.
இந்த நிலையில் வெள்ளரி விலை உயர்ந்து காணப்படுகிறது. கடந்த வாரம் கிலோ ரூபாய் 150 விற்பனையான வெள்ளரிப்பிஞ்சு நேற்று கிலோ ரூபாய் 200- க்கு விற்பனையானது. இது குறித்து வியாபாரிகள் கூறும் போது, சேலத்தில் உள்ள மார்க்கெட்டுக்கு காளிப்பட்டி, வாழப்பாடி உள்ளிட்டப் பகுதிகளில் இருந்து வெள்ளரிக்காய் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
தற்போது கிலோ ரூபாய் 200 வரை வெள்ளரிக்காய் விற்பனையாகிறது. மேலும் வெள்ளரிக்காய் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளதால் அந்த விலை குறைய வாய்ப்புள்ளது என்றனர்.


-SXgDfGgJfO.jpg)