ட்ரெண்டிங்

நீர்மோர் பந்தல்களைத் திறந்து வைத்த அமைச்சர்! 

சேலம் மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், பொதுமக்களுக்காக அரசியல் கட்சிகள் சார்பில் ஆங்காங்கே நீர்மோர் பந்தல்கள் திறக்கப்பட்டு வருகிறது. 

அந்த வகையில், தி.மு.க.வின் சேலம் மத்திய மாவட்டம், காடையாம்பட்டி கிழக்கு ஒன்றியம், பூசாரிப்பட்டி தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் மற்றும் நீர்மோர் பந்தலை கட்சியின் சேலம் மத்திய மாவட்டச் செயலாளரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான ராஜேந்திரன் இன்று (மார்ச் 31) திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு பழச்சாறு, இளநீர், நீர்மோர், நுங்கு, தர்பூசணி உள்ளிட்டவற்றை வழங்கினார். 

அதன் தொடர்ச்சியாக, காடையாம்பட்டி மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டிருந்த நீர்மோர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த அமைச்சர் ராஜேந்திரன், பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், தி.மு.க.வின் ஒன்றிய, பேரூராட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.