ட்ரெண்டிங்

கனமழை காரணமாக 7 ரயில்களை ரத்துச் செய்தது தெற்கு ரயில்வே!

 

மிக்ஜாம் புயலால் சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, ரயில் தண்டவாளங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால், சென்னையில் இருந்து சேலம் வழியாக கோவை செல்ல இருந்த ரயில்கள் உட்பட7 ரயில்களை ரத்துச் செய்தது தெற்கு ரயில்வே.

 

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை சென்ட்ரல் - மேட்டுப்பாளையம் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் (12671), சென்னை சென்ட்ரல்- கோவை சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண் 12673), சென்னை சென்ட்ரல்- போடிநாயக்கனூர் எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண் 20601), சென்னை சென்ட்ரல்- ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண் 22639), சென்னை சென்ட்ரல்- திருவனந்தபுரம் மெயில் ரயில் (ரயில் எண் 12623) , சென்னை சென்ட்ரல்- ஈரோடு ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் 22649), சென்னை சென்ட்ரல்- பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண் 22651) ஆகிய 7 ரயில் சேவைகள் இன்று (டிச.04) முழுமையாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

 

ரத்துச் செய்யப்பட்ட ரயில்களுக்கு முன்பதிவு செய்துள்ள பயணிகளுக்கு டிக்கெட் தொகை முழுமையாகத் திருப்பி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.