உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம், எம்.பாலப்பட்டி ஊராட்சியில் இன்று (மார்ச் 29) நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் எம்.எல்.ஏ. அருள் கலந்து கொண்டு தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்தும், தண்ணீரின் முக்கியத்துவத்தையும் எடுத்துக் கூறினார்.
இது குறித்து எம்.எல்.ஏ. அருள் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, 25ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் மிக அரிய பொருளாகிவிட்டால் மனிதர்கள் உயிர்வாழ இயலாத சூழல் ஏற்படும் ஆகவே தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று கூறினேன். இந்த கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து சதுப்பு நிலங்களையும் பாதுகாக்கும் வகையில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு அரசாணை:G.O.(Ms). No.152, Environment and Forest(FR5) Department, நாள் 09/09/2022-இன் கீழ் அமைக்கப்பட்டுள்ள சேலம் மாவட்ட ஈரநில மேலாண்மைக்குழு (District Level Wetland Management Committee) பாலப்பட்டி கிராம பஞ்சாயத்து சார்ந்த அனைத்து நீர்நிலைகளை பாதுகாக்கவும் மேம்படுத்தவுமான பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என இந்த கிராம சபைக் கூட்டம் வலியுறுத்துகிறது.
கழிவறை 2 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருப்பதாக அப்பகுதி பெண்கள் கூறினார்கள். அப்பகுதியில் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு கழிவறையை விரைந்து சரிசெய்து கொடுக்க வேண்டும் என்று வட்டார வளர்ச்சி அலுவலரை கேட்டுக் கொண்டு கழிவறையை சீரமைக்க செய்வதற்காக 5 லட்சம் ரூபாய் நிதி பெறப்பட்டுள்ளது விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்படும் என கூறினேன்.
பின்னர் அப்பகுதி மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த கிராம சபை கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO) திருவரங்கம் கலந்து கொண்டார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பசுமைத்தாயகம் மாநில இணைபொது செயலாளர் சி.பெ.சத்ரியசேகர் இந்த கூட்டத்தில் சமூக ஆர்வலர் செல்வம், ராஜா, வில்சன், சசிகலா, அய்யனார் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இவ்வாறு அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



-hcTFAGMRGb.jpg)