சேலம் மாநகரம், குமாரசாமிப்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு எல்லைப்பிடாரியம்மன் திருக்கோயிலில் நடைபெற்று வரும் அக்னி குண்டம் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று (மார்ச் 26) சேலம் மாநகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் அலகு குத்தி மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக கோயிலுக்கு வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
அதேபோல், கோயில் வளாகத்தில் பொங்கலிட்டும், மா விளக்கு போட்டும் பக்தர்கள் அம்மனுக்கு படையலிட்டு வழிபாடு நடத்தினர். ஆங்காங்கே பக்தர்களுக்கு சுடச்சுட அன்னதானமும் வழங்கப்பட்டன. இதனால் திருவிழா களைகட்டியது.
நாளை (மார்ச் 27) மாலை அக்னி குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விரதமிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி குண்டம் இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தவுள்ளனர். திருவிழா காரணமாக, எல்லைப்பிடாரியம்மன் கோயில் விழாக்கோலம் பூண்டுள்ளது.
இதனிடையே, எல்லைப்பிடாரியம்மன் கோயில் திருவிழா காரணமாக, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.



-SXgDfGgJfO.jpg)