ட்ரெண்டிங்

குறுகிய கால இலவச வேலைவாய்ப்பு திறன் பயிற்சி!

சேலம் 7, அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் குறுகிய கால இலவச வேலைவாய்ப்பு திறன் பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதாவது, சேலம் 7, அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் watch and clock repair course மூன்று மாத குறுகிய கால இலவச பயிற்சிக்கான சேர்க்கை நடைபெறவுள்ளது. 10- ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் வரும் ஏப்ரல் 18- ஆம் தேதிக்குள் தொழிற்பயிற்சி நிலையத்தை அணுகி பயிற்சி பெற்று பயன்பெறலாம். சேர்க்கைக்கு தங்களது அசல் ஆவணங்களான மாற்று சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் 4 புகைப்படங்களுடன் சேலம் தொழிற்பயிற்சி நிலையத்தை நேரில் அணுகி விவரம் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

இப்பயிற்சிக்கு நேரடியாக அல்லது https://forms.gle/8Zf9r5Ne61x7CERW9 என்ற Google Form-ல் Online மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு துணை இயக்குநர் / முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், ஏற்காடு மெயின் ரோடு, சேலம்-636007 என்ற முகவரியிலும், 75026-28826 என்ற கைப்பேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.