ட்ரெண்டிங்

சேலத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் அவதி! 

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. காலை 08.00 மணி முதலே வெயில் சுட்டெரிக்கத் தொடங்குவதால் வேலை செல்வோர், கல்லூரி மாணவ, மாணவிகள் கடும் அவதியடைந்துள்ளனர். குறிப்பாக, நண்பகல் நேரத்தில் கடுமையாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் சேலத்தில் பெரும்பாலான சாலைகள் மற்றும் எப்போதும் பரபரப்புடன் காணப்படும் கடைவீதி ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. 

இதன் காரணமாக, சாலையோர கடை வியாபாரிகள் வழக்கத்தை விட வியாபாரம் குறைந்துள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர். 

சேலம் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக இன்றும் வெயில் சதமடித்துள்ளது. சேலத்தில் 100.1 ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. வெயில் கடுமையாக சுட்டெரித்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.  

வரும் நாட்களில் வெயில் தாக்கம் கடுமையாக இருக்கும் என்பதால் அதிகளவில் தண்ணீர் பருக வேண்டும், பழங்களை அதிகளவில் எடுத்துக் கொள்ள வேண்டும், இளநீர், நுங்கு, தர்ப்பூசணியை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பொதுமக்களுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.