ட்ரெண்டிங்

பைசாதான் கொஞ்சம் சிரமமாக உள்ளது!- எம்.எல்.ஏ. கேள்விக்கு அமைச்சர் பதில்!

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று (மார்ச் 25) பால்வளத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய மேட்டூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சதாசிவம், மேட்டூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புக்கம்பட்டி ஊராட்சியில் குளிரூட்டியுடன் பால்கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு 3,000 முதல் 5,000 லிட்டர் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆள்பற்றாக்குறை, கட்டிடம் பழுதடைந்து உள்ளது. புதிய கட்டிடம் வேண்டும்; ஒன்று நீங்கள் கட்டி தாருங்கள்; இல்லையென்றால் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டித் தாருங்கள் என்று கோரிக்கை வைத்தார்.

இதற்கு பதிலளித்த பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், கட்டிடம் கட்டித் தருவதற்கு ஆட்சேபணை இல்லை; பைசாதான் கொஞ்சம் சிரமமாக உள்ளது; சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து பணம் கொடுத்தால் கட்டிடம் கட்டி தருவதற்கு தயாராக இருக்கிறோம், அந்த பால் சங்கங்கள் நன்றாக செயல்பட்டு வருகின்றனர் என்று பதிலளித்தார்.