சேலம் மாநகராட்சியின் கீழ் இயங்கி வரும் இரண்டு தனிக்குடிநீர் வழங்கும் திட்டங்களின் தலைமை நீரேற்று நிலையங்கள், சுத்திகரிப்பு நிலையங்கள் ஆகியவற்றை மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் மா.இளங்கோவன் ஆகியோர் இன்று (மார்ச் 15) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, மேட்டூரில் உள்ள தொட்டில்பட்டியில் அமைந்துள்ள தலைமை நீரேற்று நிலையம் மற்றும் சுத்திகரிப்பு நிலையம், கோம்புரான்காட்டில் அமைந்துள்ள நீர் உந்து நிலையம் ஆகியவற்றையும், சேலம் மேட்டூர் தனிக்குடிநீர் திட்டத்தின் கீழ் தலைமை நீரேற்று நிலையத்தையும், Stanly நீர்த்தேக்கத்திலும், கருமலைக்குடல் நீர் உந்து நிலையத்திலும், நங்கவள்ளியில் அமைந்துள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் நடைபெற்று வரும் மராமத்து மற்றும் மேம்பாட்டு பணிகளை பார்வையிட்டனர்.
எதிர்வரும் கோடை காலத்தில் சேலம் மாநகரில் தடையற்ற குடிநீர் விநியோகத்தை மேற்கொள்ளவும், நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடித்து சீரான குடிநீர் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சேலம் மாநகராட்சிக்கான தனி குடிநீர் திட்டத்தின் கீழ் தலைமை நீர்ரேற்று நிலையத்தில் மேட்டூர் காவிரி ஆற்றுப்படுக்கையில் அமைந்துள்ள மின்மோட்டார்களை மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் டாக்டர் மா.இளங்கோவன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது கண்காணிப்பு பொறியாளர் (பொ) செந்தில்குமார், உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர் பாலசுப்ரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.



-hcTFAGMRGb.jpg)